Bakshanam





கல்யாண சீர் பக்ஷ்ணங்கள்


பட்சணம் வகை
மாப்பிள்ளையாத்துக்கு
பெண்ணாத்துக்கு
1
7 சுத்து முறுக்கு
51
51
2
முள்ளு தேன் குழல் (முத்துசாரி)
51
51
3
அதிரசம்
51
51
4
லட்டு
51
51
5
மைசூர்பாக்
51
51
6
திரட்டிப்பால்
3 டப்பா

திரட்டிப்பால் : மாப்பிள்ளை மண்டபத்துக்கு வரும்போது 1, முஹூர்த்தத்தின் போது 1, சாந்தி முஹூர்த்தத்தின் போது 1.

கல்யாணத்தின் போது பருப்பு தேங்காய் வைக்க வேண்டிய தருனங்கள்


பருப்பு தேங்காய் வைக்க வேண்டிய தருனம்
கூட்டின் உள்ளே
1
விரதத்தின் போது 1 ஜோடி
மனோஹரம் பருப்பு தேங்காய்
2
மாப்பிள்ளை அழைப்புக்கு 1 ஜோடி
லட்டு பருப்பு தேங்காய்
3
முஹூர்த்தத்திற்கு 1 ஜோடி
மனோஹரம் பருப்பு தேங்காய்
4
கிருஹபிரவேசம் (முஹூர்த்தம் முடிந்தவுடன்)     1 ஜோடி
நிலக்கடலை பருப்பு தேங்காய்
5
ஆசீர்வாத பருப்பு தேங்காய் 5 ஜோடி
பொட்டு கடலை
6
சாந்தி முஹூர்த்தத்திற்கு 1 ஜோடி
மிட்டாய் (அ) மைசூர்பாகு பருப்பு தேங்காய்
7
கட்டுசாத கூடையின் போது 1 ஜோடி
தேங்காய் பர்ஃபி
8
சிலரது வழக்கம், அவாவாத்து மாப்பிள்ளைக்கும் 1 ஜோடி  பருப்பு தேங்காய் கொடுப்பது.

பல்தேய்க்கும் சாமானுடன் (பிசினீர் சாமான்) ஸ்வீட்டுடன்  (15 No.) பெண்ணாத்துக்காரா மாப்பிள்ளையை மேள தாளத்துடன் துயில் எழுப்ப வேண்டும். (ஒவ்வொரு மணமகனுக்கும் வாழ்வில் இது ஒரு அற்புதமான தருனம்)


சீமந்தம் – வளைகாப்பு சீர் பக்ஷ்ண விபரங்கள்


7சுத்து முறுக்கு – அதிரசம் – லட்டு – திரட்டிப்பால் – அப்பம் – பொரிகொள்ளு – வளைகாப்புக்கு லட்டு பருப்பு தேங்காய் 1 ஜோடி – சீமந்தத்திற்கு மனோஹரம் பருப்பு தேங்காய் 1 ஜோடி.


ஆயுஷ்யஹோமம்


5சுத்து முறுக்கு – திரட்டிப்பால் – லட்டு – மைசூர்பாகு – முத்துசாரி – காப்பு அரிசி (காப்பரிசி) – மனோஹரம் பருப்பு தேங்காய் 1 ஜோடி.

உபநயணம்


5சுத்து முறுக்கு – லட்டு – அப்பம் – அதிரசம் – திரட்டிப்பால் – (தேவையென்றால் முத்து சாரி / முள்ளு தேன்குழல்) – பருப்பு தேங்காய் 2 ஜோடி ( மனோஹரம் & லட்டு ).


சஷ்டியப்தபூர்த்தி – பீமரதசாந்தி - சதாபிஷேகம்


5சுத்து முறுக்கு – தேன் குழல் – அதிரசம் - பருப்பு தேங்காய் 1 ஜோடி – தேவையென்றால் இதர பட்சனங்களும் வைக்கலாம். சிலரது வழக்கம், அவாவாத்து மாப்பிளைகளும் பருப்பு தேங்காய் 1 ஜோடி வைப்பார்கள்.